காந்தி ஜெயந்தி விழா


காந்தி ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 2 Oct 2021 4:54 PM GMT (Updated: 2 Oct 2021 4:54 PM GMT)

காந்தி ஜெயந்தி விழா

அனுப்பர்பாளையம், 
தேசபிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாள் காந்தி ஜெயந்தி விழாவாக நேற்று திருப்பூரில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவினாசி ரோடு காந்திநகர் சர்வோதய சங்க வளாகத்தில் உள்ள காந்தி அஸ்தி கலசம் முன்பு காந்தியின் படத்திற்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்..
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் காந்தியின் முகம் பொறித்த முகமூடிகளை அணிந்து கலந்து கொண்டனர். பங்கேற்றனர். மேலும் இதில் பங்கேற்ற அனைவரும் மகாத்மா காந்தியின் பெயரால் உறுதி மொழி ஏற்றனர். இதில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன், துணைத்தலைவர் கோபால்சாமி, திருப்பூர் சமூக நல்லிணக்கம் மேடை அமைப்பாளர் வழக்கறிஞர் மோகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் மாவட்டத் தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர் குமார், சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜ், மாதர் சங்க மாவட்ட செயலாளர் மைதிலி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் நந்தகோபால், கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், வெற்றித் தமிழர் பேரவை தலைவர் ஜீவானந்தம், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் கவுரி சங்கர் உள்பட பல்வேறு பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தன்னார்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் இகலந்து கொண்டு காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


Next Story