சங்கராபுரம் அருகே பரபரப்பு கடனை திருப்பி கொடுக்காததால் டிரைவர் அடித்து கொலை


சங்கராபுரம் அருகே பரபரப்பு கடனை திருப்பி கொடுக்காததால் டிரைவர் அடித்து கொலை
x
தினத்தந்தி 2 Oct 2021 10:45 PM IST (Updated: 2 Oct 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே கடனை திருப்பி கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


சங்கராபுரம்

ஆட்டோ டிரைவர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வடசிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் மகன் முனியன்(வயது 65). இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த செல்வம்(40) என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். 
கடந்த 2 வருடத்துக்கு முன்பு வாங்கிய பணத்துக்கு அசல், வட்டியுடன் சேர்த்து செல்வத்திடம் தந்தபோது ரூ.6 ஆயிரத்தை முனியன் பாக்கி வைத்திருந்தார். இந்த பணத்தை வாங்குவதற்காக கடந்த 30-ந் தேதி செல்வம் மற்றும் அவரது உறவினரான கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் கிராமத்தை சேர்ந்த பழனி(41), முனியன் வீட்டுக்கு சென்றனர். 

அடித்து கொலை

அப்போது, செல்வத்துக்கும், முனியனின் மகன் ஆட்டோ டிரைவர் விஜயகுமார் (25) என்பவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வம் அங்கிருந்த விறகு கட்டையால் விஜயகுமாரின் தலையில் ஓங்கி அடித்தார். 
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி விஜயகுமார் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். 

2 பேர் கைது

இதுகுறித்து முனியன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப் பதிவு செய்து செல்வம், பழனி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
1 More update

Related Tags :
Next Story