காவல் நிலையத்தில் இருந்த ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் மாயம்: புதுப்பேட்டை போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்; சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் இடமாற்றம்


காவல் நிலையத்தில் இருந்த ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் மாயம்: புதுப்பேட்டை போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்; சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் இடமாற்றம்
x
தினத்தந்தி 2 Oct 2021 5:44 PM GMT (Updated: 2 Oct 2021 5:44 PM GMT)

காவல் நிலையத்தில் இருந்த ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் மாயமானதால் புதுப்பேட்டை போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

புதுப்பேட்டை, 

கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை போலீசார் வாகன சோதனை மற்றும் பெட்டிக்கடைகளில் நடத்திய சோதனையின்போது பறிமுதல் செய்த புகையிலை பொருட்களை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர். இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் திடீரென மாயமானது.

இதுதொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தீவிர விசாரணை நடத்தியதோடு, பணியின் போது கண்காணிப்பு பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட போலீஸ் ஏட்டு ராஜாவை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். 

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக புதுப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆவினங்குடிக்கும், போலீஸ்காரர் அரவிந்தன் திட்டக்குடி காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Next Story