மதுகுடித்த சிறுவன் சாவு அதிர்ச்சியில் தாத்தாவும் உயிரிழந்த பரிதாபம்

x
தினத்தந்தி 2 Oct 2021 7:05 PM GMT (Updated: 2 Oct 2021 7:05 PM GMT)

திருவலம் அருகே குளிர்பானம் என நினைத்து மதுவை குடித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அதிர்ச்சியில் அவரது தாத்தாவும் இறந்தார்.

திருவலம், அக்.3-
திருவலம் அருகே குளிர்பானம் என நினைத்து மதுவை குடித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அதிர்ச்சியில் அவரது தாத்தாவும் இறந்தார்.
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு
மது அருந்திய தொழிலாளி

வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள திருப்பாகுட்டை பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 62), தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சின்னசாமி வீட்டில் மது  குடித்துள்ளார். அப்போது முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை சாப்பிட்டுள்ளார். அவருடன் அவரது பேரன் ரித்திஷ் (5) தின்பண்டங்களை சாப்பிட்டுள்ளான். பின்னர் சின்னசாமி மீதி மதுவை வைத்துவிட்டு டி.வி பார்க்க சென்றுள்ளார்.அந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் நடைபெற்றதால் அதனை பார்க்க ரித்திஷின் தாயார் விஜயா சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த ரித்திஷ் குளிர்பானம் என்று நினைத்து தாத்தா குடித்துவிட்டு மீதி  வைத்திருந்த மதுவை குடித்துள்ளான். அப்போது புரையேறி இருமியுள்ளான். பேரனின் இருமல் சத்தம் கேட்டு அங்கு வந்த சின்னசாமி, பேரன் மதுவை அருந்தியதை கண்டு பதறி, வெளியில் சென்று விஜயாவிடம் கூறியுள்ளார்.

தாத்தா, பேரன் சாவு

இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் சின்னசாமியை கண்டித்துள்ளனர். அப்போது அவருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சின்னசாமியும், ரித்திசும் சிகிச்சைக்காக காட்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சின்னசாமியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து சிறுவன் ரித்திஷ் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

சோகம்

இதுகுறித்து தகவல் அறிந்த திருவலம் போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது குடித்து தாத்தா-பேரன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவலம்

Next Story