ரெயிலில் 21 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


ரெயிலில் 21 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Oct 2021 8:04 PM GMT (Updated: 2 Oct 2021 8:04 PM GMT)

ஜோலார்பேட்டைக்கு வந்த ரெயிலில் ரெயில்வே போலீசார் நடத்திய சோதனையில் 21 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டைக்கு வந்த ரெயிலில் ரெயில்வே போலீசார் நடத்திய சோதனையில் 21 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், முரளிமனோகரன் ஏட்டு சிவக்குமார் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நிற்கும் அனைத்து ரெயில்களில் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

நேற்று அதிகாலை கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி வரை செல்லும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் 5- வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. 

அப்போது ரெயில்வே போலீசார் டி-2 பெட்டியில் சோதனை செய்த போது சீட்டு இருக்கையில் கேட்பாரற்று கிடந்த பையில் 21½ கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ரெயில்வே போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஜோலார்பேட்டை ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story