போலீசார் பணிக்கு திரும்ப வேண்டும் டி.ஜி.பி. உத்தரவு


போலீசார் பணிக்கு திரும்ப வேண்டும்  டி.ஜி.பி. உத்தரவு
x
தினத்தந்தி 2 Oct 2021 8:12 PM GMT (Updated: 2 Oct 2021 8:12 PM GMT)

இடமாற்றம் செய்யப்பட்ட போலீசார் இன்றே அந்தந்த போலீஸ் நிலையங்களில் பணிக்கு திரும்பவேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி, அக்.3-
இடமாற்றம் செய்யப்பட்ட போலீசார் இன்றே அந்தந்த போலீஸ் நிலையங்களில் பணிக்கு திரும்பவேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
பணியிட மாற்றம்
புதுச்சேரி காவல்துறையில் 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை இடமாற்றம் செய்யப்பட்ட காவலர்கள், ஏட்டுகள், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களில் பெரும்பாலானவர்கள் மாற்றலாகி செல்லாமல் தாங்கள் பணிபுரிந்து வரும் அதே இடத்திலேயே தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள்.
புதுச்சேரியில் தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் போலீசார் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
டி.ஜி.பி. உத்தரவு
 இதுபற்றி அறிந்த புதுவை போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிறிஸ்ணியா, இடமாற்றம் செய்யப்பட்ட போலீசார் உடனடியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அந்தந்த இடத்திற்கு சென்று பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும், தவறும் பட்சத்தில் பணிக்கு செல்ல முடியாத காரணம் குறித்து உரிய விளக்கத்துடன் நாளை (திங்கட்கிழமை) பணியில் சேர வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.
மேலும், அனைத்து போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் தங்களின் கீழ் பணிபுரியும் பணி இடமாற்றம் செய்யப்பட்டவர்களை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கும் படியும் அறிவுறுத்தி உள்ளார். டி.ஜி.பி.யின் இந்த அதிரடி உத்தரவு போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story