சட்டவிரோதமாக பாரில் மது விற்பனை; உரிமையாளர் கைது


சட்டவிரோதமாக பாரில் மது விற்பனை; உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 2 Oct 2021 8:37 PM GMT (Updated: 2 Oct 2021 8:37 PM GMT)

சட்டவிரோதமாக பாரில் மது விற்பனை செய்ததாக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி பிரிவு பாதையில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. அங்கு முடிகொண்டான் கிராமத்தை சேர்ந்த திருமுருகன்(வயது 37) மது அருந்தும் கூடம்(பார்) வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டு இருந்தபோதிலும் நேற்று சட்டவிரோதமாக அந்த பாரில் மது விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டபோது பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாரின் உரிமையாளர் திருமுருகனை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Related Tags :
Next Story