கழிவறையை சுத்தம் செய்த சி.டி.ரவி எம்.எல்.ஏ.


கழிவறையை சுத்தம் செய்த சி.டி.ரவி எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 2 Oct 2021 8:58 PM GMT (Updated: 2 Oct 2021 8:58 PM GMT)

கழிவறையை சி.டி.ரவி எம்.எல்.ஏ. சுத்தம் செய்தார்.

சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காந்தி ஜெயந்தி விழா நடந்தது. அதில் எம்.எல்.ஏ சி.டி. ரவி, மாவட்ட கலெக்டர் ரமேஷ், மேல்-சபை துணை சபாநாயகர் பிரானேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலையிட்டு, மரியாதை செலுத்தினார்கள். 

அதையடுத்து சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக பா.ஜனதா பொறுப்பாளருமான சி.டி.ரவி, சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்தில் உள்ள கழிவறையை கழுவி, சுத்தம் செய்தார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:-

 தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரிக்கும் வகையிலும், காந்தி கண்ட கனவை நனவாக்கும் வகையிலும் கழிவறையை சுத்தம் செய்தேன். இதன் மூலம் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

Next Story