தற்கொலை செய்து கொண்ட நடிகை சவுஜன்யாவின் காதலனிடம் போலீஸ் விசாரணை


தற்கொலை செய்து கொண்ட நடிகை சவுஜன்யாவின் காதலனிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 2 Oct 2021 8:58 PM GMT (Updated: 2 Oct 2021 8:58 PM GMT)

தற்கொலை செய்து கொண்ட நடிகை சவுஜன்யாவின் காதலன், உதவியாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் நடிகையின் ரத்த மாதிரியை போலீசார் ஆய்வுக்காக அனுப்பி வைத்து உள்ளனர்.

பெங்களூரு: தற்கொலை செய்து கொண்ட நடிகை சவுஜன்யாவின் காதலன், உதவியாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் நடிகையின் ரத்த மாதிரியை போலீசார் ஆய்வுக்காக அனுப்பி வைத்து உள்ளனர்.

நடிகை தற்கொலை

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் சவி மாதப்பா என்கிற சவுஜன்யா (வயது 25). நடிகையான இவர் கன்னடத்தில் 2 படங்களில் நடித்து உள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் ராமநகர் மாவட்டம் கும்பலகோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டபெலே கிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த சவுஜன்யா கடந்த மாதம் 30-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கும்பலகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சவுஜன்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது காதலரான நடிகர் விவேக், சவுஜன்யாவின் உதவியாளர் மகேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கும்பலகோடு போலீஸ் நிலையத்தில் சவுஜன்யாவின் தந்தை பிரபு மாதப்பா புகார் அளித்து இருந்தார்.

காதலனிடம் விசாரணை

மேலும் சவுஜன்யா வசித்து வந்த வீட்டில் இருந்த தங்கநகைகள், பணம், செல்போன் மாயமாகி விட்டதாகவும் பிரபு மாதப்பா குற்றச்சாட்டு கூறி உள்ளார். இதற்கிடையே சவுஜன்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது உறுதியாகி இருந்தது. 
இருந்தாலும் பிரபு மாதப்பா அளித்த புகாரின்பேரில் நேற்று நடிகர் விவேக், சவுஜன்யாவின் உதவியாளர் மகேஷ் ஆகியோரை அழைத்து கும்பலகோடு போலீசார் விசாரணை நடத்தினர்.மேலும் அவர்களிடம் இருந்து சில தகவல்களை போலீசார் பெற்று கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ரத்த மாதிரி ஆய்வு

அதே நேரத்தில் சவுஜன்யாவின் ரத்த மாதிரி எடுத்து போலீசார் ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாகவும், அந்த ஆய்வு அறிக்கையின் முடிவு 20 முதல் 25 நாட்களில் கிடைக்கும் என்றும், அதன்பின்னர் தான் சவுஜன்யாவின் மரணத்திற்கு உண்மையான காரணம் தெரியவரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story