மனைவிக்கு ஆதரவாக பிரசாரம்; பஞ்சாயத்து செயலாளர் பணியிடை நீக்கம்


மனைவிக்கு ஆதரவாக பிரசாரம்; பஞ்சாயத்து செயலாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 2 Oct 2021 9:05 PM GMT (Updated: 2 Oct 2021 9:05 PM GMT)

மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது தொடர்பாக பஞ்சாயத்து செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ராதாபுரம்:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் யூனியன் கஸ்தூரிரங்கபுரம் பஞ்சாயத்தில் செயலாளராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி, அதே பஞ்சாயத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகவும், அவருக்கு ஆதரவாக பாலசுப்பிரமணியன் பிரசாரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாலசுப்பிரமணியன் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆரோக்கியதாஸ் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அவர், பஞ்சாயத்து செயலாளர் பாலசுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Next Story