காமராஜர் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை


காமராஜர் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 2 Oct 2021 10:11 PM GMT (Updated: 2 Oct 2021 10:11 PM GMT)

பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தென்காசி:
பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


பாவூர்சத்திரம்- ஆலங்குளம்- 

காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எம்.எல்.ஏ.க்கள் ராஜா, சண்முகையா, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், ஒன்றிய செயலாளர் சீனித்துரை, சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன், மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தி ெஜயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு, ஆலங்குளத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு முன்னாள் எம்.பி. ராமசுப்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள காந்தி, காமராஜர் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
நகர காங்கிரஸ் தலைவர் தங்க செல்வம் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ.வும் காந்தி, காமராஜர் படங்களுக்கு  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சுரண்டை- தென்காசி

சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால் தலைமை தாங்கினார்.
நகர பொருளாளர் அண்ணாத்துரை, மாவட்ட செயலாளர் சேர்மசெல்வம், இளைஞர் காங்கிரஸ் சந்திரன், தபேந்திரன், தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனி நாடார் எம்.எல்.ஏ அலங்கரிக்கப்பட்ட காந்தி மற்றும் காமராஜர் படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் பால் என்ற சண்முகவேல், சோனியா பேரவை பிரபாகரன், தெய்வேந்திரன், ரத்தினசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கீழ ரத வீதியில் உள்ள அவரது சிலைக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், ராஜா எம்.எல்.ஏ., நகர செயலாளர் சாதிர், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சாமிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பழனி நாடார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் நகர தலைவர் காதர் முகைதீன், பொதுக்குழு உறுப்பினர் ஜி.மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் உள்ள தென்காசி வடக்கு அ.ம.மு.க. அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட காந்தி உருவப்படத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.அய்யாத்துரை பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நகர செயலாளர் எம்.எஸ்.கே.முப்புடாதி, நகர இணை செயலாளர் பி.கனகசபாபதி, செண்பகவல்லி அணை தடுப்பு மீட்பு உரிமை குழு தலைவர் பாண்டியன், துணை ஒருங்கிணைப்பாளர் ஞானராசு, மலைவாழ் மக்கள் ஒருங்கிணைப்பாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வாசுதேவநல்லூர் காமராஜர் சிலை அருகில் உள்ள மகாத்மா காந்திஜி சேவா சங்கம் அலுவலகத்தில் மகாத்மா காந்தி 153-வது பிறந்தநாள் விழா மற்றும் காமராஜர் நினைவுநாளையொட்டி அங்கு அலங்கரித்து காந்தி, காமராஜர் திருஉருவ படங்களுக்கு சங்க தலைவர் கு.தவமணி மலர் தூவி மரியாதை செலுத்தினர். விழாவில் சங்க துணை தலைவர் த.சங்கர சுப்பிரமணியன், செயலாளர் குருசாமி பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story