புன்னக்காயல் தூயராஜகன்னி மாதா ஆலய திருவிழா தேர்ப்பவனி


புன்னக்காயல் தூயராஜகன்னி மாதா ஆலய திருவிழா தேர்ப்பவனி
x
தினத்தந்தி 3 Oct 2021 3:32 PM GMT (Updated: 3 Oct 2021 3:32 PM GMT)

புன்னக்காயல் தூயராஜகன்னி மாதா ஆலய திருவிழா தேர்ப்பவனி நடந்தது

ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே புன்னக்காயல்  தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழா நடந்தது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. கடந்த 1-ந்தேதி மணப்பாடு மறைவட்ட குரு இருதயராஜ் தலைமையில் நடந்த திருப்பலியில் சிறுவர்களுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. மாலையில் நற்கருணை பவனி, மாலை ஆராதனை நடைபெற்றது.
நேற்று முன்தினம் காலையில் திருப்பலி, தூய ராஜகன்னி மாதாவுக்கு மகுடம் அணிவித்தல், மதியம் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இரவில் ராஜகன்னி மாதா தேர் பவனி நடைபெற்றது.
விழாவின் சிகர நாளான நேற்று காலையில் ராஜகன்னி மாதா தேரின் முன்பாக திருப்பலி நடைபெற்றது. காலையில் திருவிழா திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து தூய ராஜகன்னி மாதா தேர் பவனி நடைபெற்றது. ஏற்பாடுகளை பங்குதந்தை பிராங்கிளின் தலைமையில், ஊர் கமிட்டியினர் செய்து இருந்தனர்.

Next Story