உடுமலை அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி


உடுமலை அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 3 Oct 2021 3:47 PM GMT (Updated: 3 Oct 2021 3:47 PM GMT)

உடுமலை அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி

உடுமலை
உடுமலை அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நான்கு வழிச்சாலை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் இருந்து உடுமலை நகரின் வடக்குப்பகுதிகளில் உள்ள கிராம புறங்கள் மற்றும் மடத்துக்குளம் வழியாக திண்டுக்கல் வரை 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
இதன்மூலம் நகர பகுதிகளில் வாகனபோக்குவரத்துநெரிசல் தவிர்க்கப்படும் என்று கருதப்படுகிறது.இந்த சாலையின் ஒருபகுதி உடுமலை பொள்ளாச்சி சாலையில் ராகல்பாவி பிரிவு அருகே சிறிது தூரத்தில் இருந்து பிரிந்து கிராமப்புறத்தில் செல்கிறது. புதியதாக இந்த 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் ஆங்காங்கு தீவிரமாக நடந்து வருகிறது.
பொதுமக்கள்
நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி விரைவில் பயன்பாட்டிற்கு வந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். 
எனவே நான்கு வழிச்சாலை பணியை விரைந்து  முடிக்க  வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.

Next Story