சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது


சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 Oct 2021 5:29 PM GMT (Updated: 3 Oct 2021 5:29 PM GMT)

சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைதானார்.

கீழக்கரை, 
கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்்கள் சிவலிங்கம் பெருமாள், பொந்து முனியாண்டி மற்றும் போலீசார் முஸ்லிம் பஜார் டீக்கடை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழக்கரை அலவாகரைவாடியை சேர்ந்த ஜெய கார்த்திக் (வயது36) என்பவரை சந்தேகத்தின்பேரில்  விசாரித்த போது பொந்துமுனியாண்டியை அவர் கற்களால் தாக்கினார். இதில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீழக்கரை போலீசார் வழக்குப்பதிந்து ஜெய கார்த்திக்கை கைது செய்தனர்.

Next Story