கண்மாயில் மூழ்கி முதியவர் சாவு


கண்மாயில் மூழ்கி முதியவர் சாவு
x
தினத்தந்தி 3 Oct 2021 5:32 PM GMT (Updated: 3 Oct 2021 5:32 PM GMT)

கண்மாயில் மூழ்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆர்.எஸ்.மங்கலம், 
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா வடவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (வயது65). இவர் வயல்வேலைக்கு சென்றுவிட்டு கண் மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். வெகுநேரமாகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் ஆர்.எஸ். மங்கலம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள் ளனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கண்மாயில் மூழ்கி இறந்த ராமுவின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால சிங்கம் வழக்குபதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Next Story