மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு + "||" + injured

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

வாலிபருக்கு அரிவாள் வெட்டு
வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திருப்புவனம், 
கீழச்சொரிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மனைவி அழகு. அழகு கீழச்சொரிக்குளம் ஊராட்சி யில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவரை நீக்கிவிட்டு இதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி சித்ரா என்பவரை வேலைக்கு சேர்த் துள்ளனர். இதனால் ஈஸ்வரனுக்கும், மீனாட்சி சுந்தரத்திற்கும் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு ஈஸ்வரன் வீட்டின் வெளியே இருக்கும்போது அங்கு வந்த மீனாட்சி சுந்தரம் அரிவாளால் ஈஸ்வரனை வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரன் மதுரை அரசு  மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து பழையனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்ணை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த கணவருக்கு அரிவாள் வெட்டு
மதுரையில் பெண்ணை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த கணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.
2. தந்தை- மகனுக்கு அரிவாள் வெட்டு
முனைஞ்சிப்பட்டி அருகே தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.
3. ஓடும் பஸ்சில் கண்டக்டருக்கு சரமாரி வெட்டு
ஓடும் பஸ்சில் கண்டக்டரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
4. விசாரணைக்கு சென்ற போலீஸ் ஏட்டுவுக்கு அரிவாள் வெட்டு
விசாரணைக்கு சென்ற போலீஸ் ஏட்டுவை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்
5. கோவில் பூசாரிக்கு அரிவாள் வெட்டு
கோவில் பூசாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.