சாராயம்-மது விற்ற 5 பேர் கைது


சாராயம்-மது விற்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 3 Oct 2021 5:49 PM GMT (Updated: 3 Oct 2021 5:49 PM GMT)

மயிலாடுதுறை அருகே சாராயம்-மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்பனை நடைபெறாமல் கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்  இளையராஜா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும்  தனிப்படை போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்  கோடங்குடி கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கோடங்குடி சோலையாம்பட்டினத்தைச் சேர்ந்த இளையராஜா (வயது36) என்பவர் அவரது வீட்டில் மது பாட்டில்கள் மற்றும் புதுச்சேரி சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரது வீட்டில் இருந்து 900 மதுபாட்டில்கள் மற்றும் 30 லிட்டர்  சாராயத்தை பறிமுதல் செய்தும், இளையராஜாவை கைது செய்தும் பெரம்பூர்  போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் மதுபாட்டில் விற்ற அகரவல்லம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (61), மலைக்குடி கிராமத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி (55), திருவிளையாட்டம் கிராமத்தை சேர்ந்த அய்யாறு மகன் ராசாங்கம் (28), எஸ்.புதூரை சேர்ந்த ஜான் (60) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

Next Story