தேர்தல் நடத்தை விதிகளை மீறிய 2 வேட்பாளர்கள் மீது வழக்கு


தேர்தல் நடத்தை விதிகளை மீறிய 2 வேட்பாளர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 Oct 2021 6:08 PM GMT (Updated: 3 Oct 2021 6:08 PM GMT)

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 2 வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளன. நாயகனைப்பிரியாள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 3 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் வினோத்கண்ணா மற்றும் ராஜாராம் ஆகிய 2 வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி கிராமத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டி தங்கள் சின்னங்களை விளம்பரம் செய்து பிரசாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயராஜ் உடனடியாக சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராஜ் வழிகாட்டுதல்படி நாயகனைப்பிரியாள் ஊராட்சி செயலாளர் முருகானந்தம் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் 2 வேட்பாளர்கள் மீது சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story