லாலாபேட்டை அருகே மின்னல் தாக்கி 2 பசுமாடுகள் சாவு


லாலாபேட்டை அருகே  மின்னல் தாக்கி 2 பசுமாடுகள் சாவு
x
தினத்தந்தி 3 Oct 2021 6:28 PM GMT (Updated: 3 Oct 2021 6:28 PM GMT)

மின்னல் தாக்கி 2 பசுமாடுகள் சாவு

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள வசூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி, விவசாயி. இவர் நேற்று மாலை வசூர் அருகே பசுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 2 பசுமாடுகள் பரிதாபமாக இறந்தன. மேலும் ஒரு பசு உயிருக்கு போராடி வருகிறது.


Next Story