சங்கராபுரம் ஒன்றியத்தில் 114 அலுமினிய அன்னக்கூடைகள் பறிமுதல்


சங்கராபுரம் ஒன்றியத்தில்  114 அலுமினிய அன்னக்கூடைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 4 Oct 2021 6:12 PM GMT (Updated: 4 Oct 2021 6:12 PM GMT)

சங்கராபுரம் ஒன்றியத்தில் 114 அலுமினிய அன்னக்கூடைகள் பறிமுதல்

சங்கராபுரம்

சங்கராபுரம் ஒன்றியத்தில் தனி தாசில்தார் மணிகண்டன் தலைமையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீஸ்கரர்கள் ஏழுமலை, சத்யராஜ் ஆகியோரை கொண்ட பறக்கும் படையினர் சங்கராபுரம் அருகே குளத்தூர் கூட்டுரோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்தபோது அதில் 114 அலுமினிய அன்னகூடைகள் மற்றும், 144 சீப்புகள் இருந்ததை கண்டுபிடித்தனர். 

விசாரணையில் ஆட்டோவில் வந்தவர் தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் மேற்கண்ட பொருட்களை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அன்னகூடைகள் மற்றும் சீப்புகளை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் அவற்றை சங்கராபுரம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகன்நாதனிடம் ஒப்படைத்தனர். அப்போது தேர்தல் உதவியாளர் பிரதீப்குமார் உடன் இருந்தார். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.20 ஆயிரம் என கூறப்படுகிறது.

Next Story