பாசப்போராட்டம் நடத்திய குரங்கு


பாசப்போராட்டம் நடத்திய குரங்கு
x
தினத்தந்தி 4 Oct 2021 8:07 PM GMT (Updated: 4 Oct 2021 8:07 PM GMT)

வத்திராயிருப்பு அருகே குரங்குகள் பாசப்போராட்டம் நடத்தியது.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை சதுரகிரி மலை பகுதியில் நூற்றுக்கணக்கான குரங்குகள் உள்ளன. இந்த குரங்குகள் தாணிப்பாறை அடிவாரம் பகுதிகளிலும், அப்பகுதியில் உள்ள தோப்புகளிலும் வசித்து வருகின்றன. அடிவாரப்பகுதியில் இரை தேடி குரங்குகள் சுற்றி திரிகின்றன. இந்தநிலையில் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி குரங்கு ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. இதைக்கண்ட மற்ற குரங்குகள் இறந்த குரங்கின் அருகே தொட்டு பார்த்தும், முகந்து பார்த்தும் உயிருடன் உள்ளதா என பாசப்போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கண் கலங்கினர். இதுகுறித்து  தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் உயிரிழந்த குரங்கை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். வனத்துறையினர் குரங்கை எடுத்து சென்றதும் மற்ற குரங்குகள் கண்ணீர் மல்க அங்கிருந்து விடை பெற்று சென்றன. 

Next Story