தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

புகார் பெட்டி செய்தி எதிரொலி:
புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் அருகே வாழ்க்கை கிராமம் வடக்கு தெரு தெருவில் மின்கம்பம் சேதம் அடைந்து இருந்தது. இதனை  சுட்டிக்காட்டி தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளிவந்தது. இ்தன் எதிரொலியாக அங்கு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. நடவடிக்ைக எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 
-பொதுமக்கள், வாழ்க்கை கிராமம்.
சாலை வசதி வேண்டும் 
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் கீழப்பாளையம் 2-வது வார்டில் உள்ள பிரதான பாதையில் இதுவரை சாலை வசதி இல்லை. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். ஆனால் சாலை வசதி இல்லாததால் பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கீழப்பாளையம் 2-வதுவார்ட்டில் தார்சாலை அல்லது சிமெண்டு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 
-பொதுமக்கள், பட்டுக்கோட்டை.
தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்படுமா?
தஞ்சை மாவட்டம் ஊரணிபுரம் தெற்கு வெட்டுவாக்கோட்டை ஊராட்சியில் 30 வருடங்களுக்கு முன்பு அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. சில வீடுகள் இடிந்து விழுந்துவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதமுள்ள தொகுப்பு வீடுகளை கட்டித்தர வேண்டும். பழுதடைந்த வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
-பொதுமக்கள், வெட்டுவாக்கோட்டை.
புகார்பெட்டி செய்தி எதிரொலி:
குப்பைகள் அகற்றம்
தஞ்சை அருளானந்த அம்மாள் நகர், 12-வது தெருவில், அரசு மகளிர் தங்கும் இடம் அருகில் குப்கைள் அகற்றப்படாமல் தேங்கி கிடந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளிவந்தது. இதன் எதிரொலியாக மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து குப்பைகள் அகற்றப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா கோவிந்தநாட்டுச்சேரி அம்மன் கோவில் தெருவில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்க ெதாட்டி மிகவும் சேதமடைந்துள்ளது. மேலும் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால்  அந்த வழியாக செல்பவர்கள் உயிர்பலி ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்பலி ஏற்படும் முன்பு சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
-மணிகண்டன், கோவிந்தநாட்டுசேரி.
குண்டும், குழியுமான சாலை
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள லெட்சுமிபுரம் பகுதியில் திருப்பதி நகர் உள்ளது. இந்த நகரில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் திருப்பதி நகர் பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமாக ஆபத்தான நிலையில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், தஞ்சாவூர்.
சாலை சீரமைக்கப்படுமா? 
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் பிலோமினா நகர் ஐந்தாம் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள சாலை வழியாகத்தான் நாஞ்சிக்கோட்டை மெயின் சாலைக்கு ஐஸ்வர்யா நகர், பாரதி நகர், பழனியப்பா நகர், லட்சுமி நகர் மற்றும் வெங்கடேஸ்வரா நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிலோமினா நகர் 5-ம் தெரு சாலை பராமரிப்பின்றி மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி மாணவ-மாணவிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மழைநீர் தேங்குவதால் சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.எனவே, பொதுமக்களின் நலன் கருதி பிலோமினா நகர் 5-ம் தெருவில் உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பிலோமினாநகர் பகுதி மக்கள், தஞ்சாவூர்.Next Story