திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை


திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை
x
தினத்தந்தி 5 Oct 2021 2:09 AM GMT (Updated: 5 Oct 2021 2:17 AM GMT)

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளை (புதன்கிழமை) மற்றும் 9-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. அனைத்து வகை பள்ளிகளும் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட உள்ளதாலும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்ல உள்ளதால் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் 8-ந் தேதி ஆகிய 2 நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். 

மேலும் தேர்தல் நடைபெறும் நாட்களான நாளை (புதன்கிழமை) மற்றும் 9-ந்தேதி ஆகிய 2 நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Next Story