கும்மிடிப்பூண்டியில் பஸ்சில் 1¼ கிலோ கஞ்சா கடத்தல்; டாக்டர் கைது


கும்மிடிப்பூண்டியில் பஸ்சில் 1¼ கிலோ கஞ்சா கடத்தல்; டாக்டர் கைது
x
தினத்தந்தி 5 Oct 2021 4:07 AM GMT (Updated: 5 Oct 2021 4:07 AM GMT)

கும்மிடிப்பூண்டி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி வழியாக பஸ்சில் 1¼ கிலோ கிலோ கஞ்சா கடத்தி வந்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.

பொன்னேரி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் கிராமத்தில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்ட பிறகே வெளியில் செல்ல அனுமதிக்கப்படும். இந்நிலையில் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் எளாவூர் சோதனைச் சாவடி முன்பு பாலகிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்ற பஸ்சில் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு நபரின் பையில் 1,250 கிலோ அளவு கொண்ட கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் சென்னை மேற்கு தாம்பரம் முல்லை நகரை சேர்ந்த ரேவந்த்குமார் (வயது 21). பிசியோதெரபி ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. பின்னர் அவரிடம் கஞ்சாவை பறிமுதல் செய்த நிலையில் வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் போலீசார் அடைத்தனர்.

Next Story