மேற்குவங்க மாநிலத்தில் இருந்து வந்த அவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்
மேற்குவங்க மாநிலத்தில் இருந்து வந்த அவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்.
சென்னை,
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு நேற்று மேற்குவங்க மாநிலம் அவுராவில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயிலில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர், ரெயில்வே பாதுகாப்புப்படையினரும், ரெயில்வே போலீசாரும், ரெயிலுக்குள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்றில் இருக்கைக்கு அடியில் 16 கிலோ கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது. அதனை திறந்து பார்த்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார், தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சென்டிரல் ரெயில்வே போலீசார், அதனை ரெயிலில் சட்டவிரோதமாக எடுத்து வந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story