ஆந்திராவில் இருந்து வேனில் கடத்திய 369 கிலோ கஞ்சா பறிமுதல் 10 பேர் கைது


ஆந்திராவில் இருந்து வேனில் கடத்திய 369 கிலோ கஞ்சா பறிமுதல் 10 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2022 5:26 AM IST (Updated: 10 Jan 2022 5:26 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து வேனில் கடத்திய 369 கிலோ கஞ்சா பறிமுதல் 10 பேர் கைது.

சென்னை,

ஆந்திராவில் இருந்து வேனில் பெரிய அளவில் கஞ்சா கடத்தி வருவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் சென்னையை அடுத்த காரனோடை வாகன சுங்கச்சாவடி அருகே மத்திய போதைப்பொருள் தடுப்பு தனிப்படை போலீசார் வாகனங்களை மடக்கி சோதனை நடத்தினார்கள்

அப்போது வேன் ஒன்றை மடக்கி சோதனை போட்டனர். அந்த வேனில் 16 சாக்கு மூட்டைகளில் கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த கஞ்சா 369 கிலோ எடை கொண்டதாகும்.வேனில் கடத்தி வந்த கஞ்சாவுக்கு பாதுகாப்பாக பின்னால் காரில் வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் இந்த கஞ்சாவை வினியோகம் செய்ய திருச்சியில் உள்ள விடுதி ஒன்றில் 7 பேர் தங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்களும் கைதானார்கள்.திருச்சியில் வினியோகம் செய்தது போக மீதி கஞ்சாவை கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

மேற்கண்ட தகவல் மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story