போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.335 கோடியில் 3 புதிய மேம்பாலங்கள்: சென்னை மாநகராட்சி கமிஷனர்


போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.335 கோடியில் 3 புதிய மேம்பாலங்கள்: சென்னை மாநகராட்சி கமிஷனர்
x
தினத்தந்தி 14 Jan 2022 12:17 PM GMT (Updated: 14 Jan 2022 12:17 PM GMT)

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.335 கோடியில் 3 புதிய மேம்பாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் பகுதியில் தங்கு தடையின்றி போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் முதற்கட்டமாக சென்னை ஓட்டேரியில் கொன்னூர் நெடுஞ்சாலை-ஸ்ட்ராஹன்ஸ் சாலை சந்திப்பிலும், தெற்கு உஸ்மான் சாலை-சி.ஐ.டி.நகர் முதல் பிரதான சாலை இடையேயும், கணேசபுரம் சுரங்கப்பாதை மேலேயும் என 3 புதிய மேம்பாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.335 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கணேசபுரம் சுரங்கப்பாதைக்கு மேலே ரூ.142 கோடியில் அமைக்கப்படும் பாலம் இருபுறமும் பயணம் மேற்கொள்ளும் வகையில் 4 வழிப்பாதையாக அமைக்கப்பட உள்ளது.

கொன்னூர் நெடுஞ்சாலை-ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் ரூ.62 கோடியிலும், தெற்கு உஸ்மான் சாலை-சி.ஐ.டி. நகர் முதல் பிரதான சாலையில் ரூ.131 கோடியிலும் மேம்பாலங்கள் அமைய உள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, பணிகள் விரைந்து தொடங்கப்படும். இந்த பணிகள் முடிந்தால் பெரும் போக்குவரத்து நெரிசல் குறையும் என மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.


Next Story