திருவண்ணாமலை மாவட்டத்தில் 547 பேருக்கு கொரோனா


திருவண்ணாமலை மாவட்டத்தில் 547 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Jan 2022 5:38 PM GMT (Updated: 23 Jan 2022 5:38 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 547 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகின்றது. 

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 547 ஆக பதிவாகி உள்ளது. 

மேலும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 79 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 60 ஆயிரத்து 920 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 57 ஆயிரத்து 108 பேர் குணமடைந்து உள்ளனர்.

678 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது 3,134 பேர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story