சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய திற்பரப்பு அருவி


சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய திற்பரப்பு அருவி
x
தினத்தந்தி 23 Jan 2022 5:53 PM GMT (Updated: 23 Jan 2022 5:53 PM GMT)

சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய திற்பரப்பு அருவி

திருவட்டார், 
கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் திற்பரப்பு அருவி மற்றும் படகுத்துறை உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. திருவட்டார் போலீசார் மற்றும் அருவிக்கரை பஞ்சாயத்து சார்பில் எச்சரிக்கை அறிவிப்புடன் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது.  இதேபோல், மாத்தூர் தொட்டிப்பாலமும் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கும் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story