புகையிலை பொருட்கள் வைத்திருந்த வாலிபர் கைது


புகையிலை பொருட்கள் வைத்திருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2022 5:54 PM GMT (Updated: 23 Jan 2022 5:54 PM GMT)

புகையிலை பொருட்கள் வைத்திருந்த வாலிபர் கைது

காரைக்குடி,
காரைக்குடி ரவுடிகள் ஒழிப்பு பிரிவின் தனிப்படை போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் தவமுனி தலைமையில் கல்லுக்கட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சைக்கிளில் பைகளுடன் சந்தேகத்திற்கிடமாக சென்ற நபரை பிடித்து அந்த பைகளில் சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் மேல ஊரணி தெற்கு பகுதியில் ஒரு கிட்டங்கியின் மாடியில் 50 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும். இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story