30 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்


30 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Jan 2022 7:31 PM GMT (Updated: 23 Jan 2022 7:31 PM GMT)

விருதுநகரில் 30 மூடை ரேஷன் அரிசியை வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர், 
விருதுநகர் கிழக்கு போலீசார் இந்நகர் தலைமை தபால் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்ேபாது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வேனில் தலா 40 கிலோ கொண்ட 30 மூடை ரேஷன் அரிசி இருந்தது. ரேஷன் அரிசி மூடைகளை வேனுடன் பறிமுதல் செய்து இதுதொடர்பாக 2 பேைர போலீசார் கைது செய்தனர்.  விருதுநகரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் அலுவலகம் இருந்தும் அவர்கள் முறையாக கண்காணிக்காததால் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் கடத்தப்படும் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்யும் நிலை தொடர்கிறது. எனவே உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தங்களது கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story