மாநகராட்சியில் பெண்கள் போட்டியிடும் 50 வார்டுகள் எது?-அதிகாரபூர்வ அறிவிப்பு


மாநகராட்சியில் பெண்கள் போட்டியிடும் 50 வார்டுகள் எது?-அதிகாரபூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Jan 2022 7:42 PM GMT (Updated: 23 Jan 2022 7:42 PM GMT)

மதுரை மாநகராட்சியில் பெண்கள் போட்டியிடும் 50 வார்டுகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

மதுரை, 

மதுரை மாநகராட்சியில் பெண்கள் போட்டியிடும் 50 வார்டுகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

50 சதவீதம்

மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் மொத்தம் 50 வார்டுகள் பெண்கள் மட்டும் போட்டியிடுவதற்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த வார்டுகள் குறித்த பட்டியல் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பரவிக்கொண்டு இருந்தன. ஆனால் இவை அதிகாரபூர்வ பட்டியல் இல்லை என்றும், அதனை நம்ப வேண்டாம் என்று மாநகராட்சி அறிவித்து இருந்தது. இந்த நிலையில் பெண்கள் மட்டும் போட்டியிடும் வார்டுகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி பெண்கள் பொது போட்டியிடும் வார்டுகள் விவரம் வருமாறு:-
வார்டு-1, 2, 4, 5, 6, 8, 10, 12, 14, 15, 17, 20, 22, 26, 28, 32, 33, 34, 35, 42, 44, 45, 46, 47, 48, 50, 51, 54, 55, 56, 57, 60, 61, 69, 70, 75, 78, 79, 85, 86, 89, 94, 95, 96, 97, 98 ஆகும். இதுதவிர ஆதிதிராவிடர்கள் பெண்கள் பிரிவில் வார்டுகள் 30, 59, 88, 100 ஆகிய வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.

பெண் மேயர்

இந்த 50 வார்டுகள் தவிர மற்ற பொது வார்டுகளிலும் பெண்கள் போட்டியிடுவதற்கு தடையில்லை. ஒருவேளை பொது பிரிவிலும் பெண் வேட்பாளர்கள் வெற்றி பெறும்பட்சத்தில் பெண் கவுன்சிலர்களின் எண்ணிக்கையே மாநகராட்சியில் அதிகமாக இருக்கும். அதே போல் ஏற்கனவே மதுரை மாநகராட்சி பெண் மேயருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 50 வார்டுகளில் போட்டியிடும் பெண்களில் ஒருவர் தான் மேயராக பொறுப்பேற்கும் வாய்ப்பு உள்ளது.
பெண்கள் தவிர ஆதிதிராவிடர்கள் பொது பிரிவிற்கு 31, 71, 77 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு அரசாணையிலும் வெளியிடப்பட்டு உள்ளன. எனவே அதன் அடிப்படையில் தான் மதுரை மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.
----
 

Next Story