மோட்டார் சைக்கிளில் திடீர் தீ


மோட்டார் சைக்கிளில் திடீர் தீ
x
தினத்தந்தி 24 Jan 2022 4:50 PM GMT (Updated: 24 Jan 2022 4:50 PM GMT)

ராமநாதபுரத்தில் மோட்டார் சைக்கிளில் திடீரென தீ பிடித்து எரிந்தது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் வானக்காரத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெபராஜ் என்பவரின் மகன் ஜெபஸ் பர்னபஸ் (வயது 27). இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை தனது நண்பரான சக்கரக்கோட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த செல்வா என்பவரிடம் கொடுத்து இருந்தாராம். இந்தநிலையில் இரவு திடீரென்று இந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டு இருந்த எச்சரிக்கை கருவி மூலம் தகவல் கிடைத்ததை அடுத்து ஜெபஸ் தனது மோட்டார் சைக்கிள் குறித்து நண்பரிடம் கேட்டுள்ளார். இதனால் செல்வா வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந் தார். இதுகுறித்து ஜெபஸ் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story