ராமநாதபுரம் தேவஸ்தான அதிகாரி மீது வழக்கு


ராமநாதபுரம் தேவஸ்தான அதிகாரி மீது வழக்கு
x
தினத்தந்தி 24 Jan 2022 4:51 PM GMT (Updated: 24 Jan 2022 4:51 PM GMT)

கும்பாபிஷேக விழாவில் கொரோனா விதிமீறல் தொடர்பாக ராமநாதபுரம் தேவஸ்தான அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் நகரில் புகழ்வாய்ந்த கோதண்டராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடை பெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமலும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமு மேற்கண்ட கோவில் திருவிழாவில் கொரோனா விதிமுறைகளை பின் பற்றாமலும், சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமலும் விழாவை நடத்தியதாக ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ் தான சரக பொறுப்பாளர் சரண்யா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story