மதமாற்றம் செய்ய முயலும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்


மதமாற்றம் செய்ய முயலும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 24 Jan 2022 5:00 PM GMT (Updated: 24 Jan 2022 5:00 PM GMT)

கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்

நாகப்பட்டினம்:-

சிவசேனா கட்சியின் மாநில முதன்மை செயலாளர் சுந்தரவடிவேலன், தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்து மதத்தை தவிர வேறு மதத்தினர் நடத்திவரும் கல்வி நிலையங்களில் இந்துமத சின்னங்களான விபூதி, குங்குமம், பொட்டு உள்ளிட்டவை அணிந்து வரக்கூடாது என்றும், பூ வைத்துக் கொண்டு வரக்கூடாது என்றும், ருத்ராட்ச மாலை, கைகளில் காப்பு, முடிக்கயிறு அணிந்து வரக்கூடாது என்றும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். மேலும் பாரம்பரிய இந்து கலாசாரப்படி, வாழ்வியல் முறைப்படி மத சின்னங்களை அணிந்து வரும் மாணவ-மாணவிகளை மிகக் கடுமையாக தண்டிப்பதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இந்துமத வெறுப்புணர்ச்சியுடன், நடந்துகொண்டு மாணவ, மாணவிகளை மதம் மாற்றும் முயற்சிகளில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களை மூட வேண்டும். இதற்காக சிவசேனா கட்சி சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும். மதமாற்றம் செய்ய முயலும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story