108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்


108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
x
தினத்தந்தி 24 Jan 2022 5:08 PM GMT (Updated: 24 Jan 2022 5:08 PM GMT)

கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

கொள்ளிடம்:-

கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. 

பிரசவ வலி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழைய பாளையம் கிராமத்தில் இருந்து நந்தினி என்ற பெண்ணுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. 
இதையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆம்புலன்ஸ் சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் கண்ணன் ஆம்புலன்சை சாலை ஓரமாக நிறுத்தினார்.

கிராம மக்கள் பாராட்டு

ஆம்புலன்சில் இருந்த அவசரகால மருத்துவ அலுவலர் நடராஜன், அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். இதில் அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த பெண் பாதுகாப்பாக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 
அங்கு தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளனர். பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளித்து பிரசவம் நல்ல முறையில் நடைபெற உதவிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story