லட்சுமிபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு


லட்சுமிபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 24 Jan 2022 5:33 PM GMT (Updated: 24 Jan 2022 5:33 PM GMT)

லட்சுமிபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

சீர்காழி:-

சீர்காழி அருகே திருநன்றியூர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான உலகநாயகி அம்மன் சமேத லட்சுமிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அஸ்தம் நட்சத்திரத்துக்கு உரிய தலமாகும். பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 20-ந் தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடந்தன. இதையடுத்து கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார்கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன், சிதம்பரம் மவுனகுருசாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வைத்தீஸ்வரன் கோவில் கட்டளை திருநாவுக்கரசு சுவாமிகள் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Next Story