இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2022 5:46 PM GMT (Updated: 24 Jan 2022 5:47 PM GMT)

தூத்துக்குடி, திருச்செந்தூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மதம் மாற வற்புறுத்தியதால், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டதாக கூறியும், தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். பா.ஜனதா மாவட்ட பொது செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், மகளிரணி மாநில பொது செயலாளர் நெல்லையம்மாள், இந்து முன்னணி திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜூ, நகர பொது செயலாளர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை கோட்ட செயலாளர் சக்திவேலன், மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர்கள் பிரபாகர், கசமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெட்டும் பெருமாள், நகர தலைவர் மாயாண்டி, நகர துணை தலைவர் மணி, பா.ஜனதா கோட்ட துணை அமைப்பாளர் ராஜா, மாவட்ட பொது செயலாளர் செல்வராஜ், திருச்செந்தூர் நகர தலைவர் சரவணன் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., சேவாபாரதி, இந்து ஆட்டோ முன்னணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி சார்பில், தூத்துக்குடி 1-ம் கேட் காந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்துகுமார் தலைமை தாங்கினார். ராகவேந்திரா, சிவலிங்கம், பலவேசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை கோட்ட செயலாளர் சக்திவேலன் கண்டன உரையாற்றினார். தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் பால்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.கனகராஜ், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் ராஜேந்திரன், இந்து வியாபாரிகள் சங்க மாநில தலைவர் ஈசுவரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story