‘இன்ஸ்டாகிராம்’ மூலம் மலர்ந்த காதல்; வாலிபருடன் சென்ற நர்சிங் மாணவி மீட்பு


‘இன்ஸ்டாகிராம்’ மூலம் மலர்ந்த காதல்; வாலிபருடன் சென்ற நர்சிங் மாணவி மீட்பு
x
தினத்தந்தி 24 Jan 2022 6:08 PM GMT (Updated: 24 Jan 2022 6:08 PM GMT)

‘இன்ஸ்டாகிராம்’ மூலம் மலர்ந்த காதல்; வாலிபருடன் சென்ற நர்சிங் மாணவி மீட்பு

சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ். கோட்டையை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது மகள் நிவேதா(வயது 19), மதுரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் நிவேதாவை கடந்த 22-ந்தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிவேதாவை தேடி வந்தனர். மேலும் அவரின் செல்போன் எண்ணுக்கு வரும் அழைப்பை கண்காணித்தனர். இதில் அவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை மீட்டனர். மேலும் அவருடன் இருந்த சென்னை திருவாஞ்சேரி மாப்பேடு பகுதியை சேர்ந்த வெற்றிவேல்(23) என்பவரை விசாரணைக்காக எஸ்.எஸ். கோட்டைக்கு அழைத்து வந்தனர்.  விசாரணையில் நிவேதா கல்லூரிக்கு செல்லும்போது ‘இன்ஸ்டாகிராம்' எனும் சமூக வலைத்தளம் மூலம் வெற்றிவேலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. தொடர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.  தங்கள் காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கருதி நிவேதா வெற்றிவேலுடன் சென்னைக்கு சென்றது தெரியவந்தது. 

Next Story