தந்தை-மகனை கத்தியால் குத்திய வாலிபர் மீது வழக்கு


தந்தை-மகனை கத்தியால் குத்திய வாலிபர் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 Jan 2022 7:54 PM GMT (Updated: 24 Jan 2022 7:54 PM GMT)

தந்தை-மகனை கத்தியால் குத்திய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள குறிச்சி காலனி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது வீட்டின் முன்பு நின்று தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது செல்வத்தின் மகன் நித்திஷ்(15), ஏன் இப்படி திட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டதை தொடர்ந்து, அவரை சுரேஷ் தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த சிறிய கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. அவரை தடுத்து, ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்கச்சென்ற செல்வத்தை, அதே கத்தியால் தலையில் கிழித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நித்திஷ் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து செல்வம் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Next Story