ஈரோட்டில் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு; மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தொடங்கி வைத்தார்


ஈரோட்டில் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு; மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Jan 2022 9:49 PM GMT (Updated: 24 Jan 2022 9:49 PM GMT)

ஈரோட்டில் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தொடங்கி வைத்தார்.

ஈரோடு
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2021-2022-ம் ஆண்டுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் இந்த கலந்தாய்வு மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெறுவதற்காகவும் நடத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் அரசு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஈரோடு அருகே பவளத்தாம்பாளையத்தில் உள்ள ஏ.இ.டி. பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி கலந்தாய்வை தொடங்கி வைத்தார்.
அரசு மேல்நிலை பள்ளிக்கூடங்கள், உயர்நிலை பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் பணியிட மாறுதல் கேட்டு 17 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 12 பேர் பணியிட மாறுதல் பெற்றனர். அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் பெறுவதற்கு தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

Next Story