மருத திரைப்படத்தை கண்டித்து மறியல்


மருத திரைப்படத்தை கண்டித்து மறியல்
x
தினத்தந்தி 25 Jan 2022 4:59 PM GMT (Updated: 25 Jan 2022 4:59 PM GMT)

தேனியில் மருத திரைப்படத்தை கண்டித்து மறியல் நடந்தது.

தேனி:

இயக்குனர் ஜி.ஆர்.எஸ். இயக்கத்தில், ராதிகா சரத்குமார், சரவணன், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ள ‘மருத' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. செய்முறை கலாசாரத்தை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஒரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் சிலர், தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் இந்த திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு  திரண்டனர். அவர்கள் இந்த திரைப்படம் தங்கள் சமுதாயத்தை அவதூறாக சித்தரிப்பதாக கூறி, தியேட்டர் முன்பு பூதிப்புரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

 திரைப்பட இயக்குனருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story