எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம்


எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 25 Jan 2022 5:03 PM GMT (Updated: 25 Jan 2022 5:03 PM GMT)

காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம் நடந்தது.

உத்தமபாளையம்:

காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. முகாமில், டெக்ஸா ஸ்கேன் கருவியின் மூலம் எலும்புகளின் வலிமை, அதன் தாங்கும் திறன், தேய்மானத்தின் அளவு போன்றவற்றை கண்டறிந்து கூறப்பட்டது. 

மேலும் டெக்ஸா ஸ்கேன் பரிசோதனை மூலம் எலும்புகளின் அடர்த்தி பற்றி தெரிவிக்கப்பட்டது. முகாமில், ஏராளமான ஆண், பெண்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

நோய் பாதித்தவர்களுக்கு, சித்த மருத்துவ உணவியல் பிரிவில் இந்நோயை தடுக்கும் உளுந்து, வெந்தயம் பால், பால் பொருட்கள், கீரைகள் மற்றும் பிரண்டை என்னும் மூலிகை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. 

மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயை தடுக்கும் வழிமுறைகளான வைட்டமின் ‘டி’ சத்து உணவுகள் மற்றும் வெயில் காய்தல், நடைப்பயிற்சி, உடல் எடையை கட்டுக்குள் வைத்தல், வாழ்வியல் மாற்றங்கள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

முகாமில், கலந்து கொண்டவர்களுக்கு, அமுக்கரா சூரணம், சங்கு மாத்திரைகள், முத்துச்சிப்பி மாத்திரைகள், குங்கிலிய மாத்திரைகள், பிரண்டை மாத்திரைகள் மற்றும் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது முகாமில், மருத்துவ அலுவலர் டாக்டர் அர்ச்சனா, சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் சிராஜூதீன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story