திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு உள்பட 629 பேருக்கு கொரோனா


திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு உள்பட 629 பேருக்கு கொரோனா
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உள்பட 629 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உள்பட 629 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

629 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 629 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 62 ஆயிரத்து 97 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 57 ஆயிரத்து 900 பேர் குணமடைந்து உள்ளனர். 678 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 519 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். 

போலீஸ் சூப்பிரண்டு

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது விடுமுறையில் உள்ளார். 

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூடுதல் பொறுப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தையும் கண்காணித்து வருகிறார்.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கொரோனா அறிகுறியால் பாதிக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். எனவே தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story