தினத்தந்தி புகார் பெட்டி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 25 Jan 2022 6:25 PM GMT (Updated: 25 Jan 2022 6:25 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை. இதனால் நோயாளிகள் மற்றும்  முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எரியாத மின்விளக்கை மாற்றி சரிசெய்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், இலுப்பூர், புதுக்கோட்டை. 

தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம் 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், தெரணி கிராமத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகின்றனர். இவை சாலையில் நடந்து செல்லும் குழந்தைகளையும், பெண்களையும் கடிக்க வருகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் செல்லும்போது அச்சத்துடனேயே செல்கின்றனர். மேலும் நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு சாலையின் குறுக்கே ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள்  நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே விபரீதம் ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், தெரணி, பெரம்பலூர். 

குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் 
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, மேலப்பட்டி இ.பி.  ஆபிஸ் அருகில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக குடிநீர் வீணாகி வருகிறது.  இதனால் செல்ல வேண்டிய இடத்திற்கு போதிய குடிநீர் செல்லாததால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குழாய் உடைப்பில் இருந்து வெளியேறும் குடிநீரானது அருகில் தேங்கி நிற்பதினால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மேலப்பட்டி, புதுக்கோட்டை. 

அடிப்படை வசதி ஏற்படுத்தப்படுமா? 
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திருமங்கலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள  புகழ்பெற்ற  சாமவேதீஸ்வரர் கோவில் அருகே உள்ள கோவில் செயல் அலுவலர் குடியிருப்பு பராமரிப்பு இன்றி பழுது அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் முட்புதர்கள் மண்டி உள்ளதால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முறையான குடிநீர் வசதி, கழிவறை வசதி இல்லாததால் பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.  கோவிலுக்கு பக்தர்கள் வரும்போது இந்த கட்டிடத்தின் அருகே சென்றால் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள்,  திருமங்கலம், திருச்சி. 

கண்காணிப்பு கேமரா சரி செய்யப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூரில் கண்காணிப்பு கேமரா உள்ளது. இந்த கேமரா பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது‌. இதனால் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதால் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிவது சிரமமாக உள்ளது. எனவே அகரம்சீகூரில் உள்ள கண்காணிப்பு கேமராவை சரி செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராஜேந்திரன், அகரம்சீகூர், பெரம்பலூர்.

சிதிலமடைந்த மின்கம்பம் 
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், மாவத்தூர் கிராமம், குளக்காரன்பட்டி வடக்கு தெருவில்  அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.  பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், குளக்காரன்பட்டி, கரூர். 

குண்டும், குழியுமான தார் சாலை
திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் வட்டம் பெரகம்பி-எதுமலை இடையேயான வனச்சாலை பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
கார்த்திக், பெரகம்பி, திருச்சி. 

நாய்களால் பொதுமக்கள் அச்சம் 
திருச்சி மாவட்டம், துறையூர் முசிறி பிரிவு சாலை ஆரம்பிக்கும் இடம் முதல் போக்குவரத்து காவல் நிலையம் வரை உள்ள சாலையில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் குழந்தைகளையும், பெண்களையும் கடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது.  இதனால் சாலையில் நடக்கவே பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும்  நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு சாலையின் குறுக்கே ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
வாகன ஓட்டிகள்,
சரவணன், துறையூர், திருச்சி.

ஆபத்தான கிளை நூலகம் 
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், அலகரை ஊராட்சியில் உள்ள அரசு கிளை நூலக கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் நூலகத்திற்கு வரும் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். மேலும் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
நிவாஸ், அரியனாம்பேட்டை, திருச்சி. 


Next Story