திருச்செந்தூரில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திருச்செந்தூரில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2022 6:28 PM GMT (Updated: 25 Jan 2022 6:28 PM GMT)

திருச்செந்தூரில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் எப்ரேம். தற்போது அவருக்கு பணியிட மாற்று ஆணை வழங்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் பணியிட மாற்று ஆணையை திரும்ப பெற கோரியும், தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக்கோரியும் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் அருகில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சங்கத்தமிழன், மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், செந்தூர் நலச்சங்க தலைவர் ஜோசப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஆசாத், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட துணை செயலாளர் டிலைட்டா, கலாம் மாணவர் இயக்க அமைப்பாளர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சாத்தான்குளம் ஒன்றிய துணை செயலாளர் சுரேந்தர் நன்றி கூறினார்.

Next Story