மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 25 Jan 2022 7:18 PM GMT (Updated: 25 Jan 2022 7:18 PM GMT)

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலியானார்.

பொறையாறு:
செம்பனார்கோவில் அருகே கண்டியன் கடலி கிராமத்தை சேர்ந்த அமிர்நாதன் மகன் லூர்துசேவியர் (வயது36). இவர் நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில் செம்பனார்கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தார். செம்பனார்கோவிலில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது முன்னாள் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென வலது புறமாக திரும்பியதாக தெரிகிறது. அப்போது  லூர்து சேவியர் அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லூர்துசேவியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story