இடப்பிரச்சினையில் கோஷ்டி மோதல்; பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்கு


இடப்பிரச்சினையில் கோஷ்டி மோதல்; பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 Jan 2022 7:20 PM GMT (Updated: 25 Jan 2022 7:20 PM GMT)

இடப்பிரச்சினையில் கோஷ்டி மோதல் தொடர்பாக பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி மலர்கொடி(வயது 56). இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் முருகனின் மனைவி சங்கீதா(36). இவர்களது குடும்பத்திற்கு இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் மலர்க்கொடி மற்றும் சங்கீதா குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொண்டதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மலர்கொடி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சங்கீதா, தமிழரசனின் மனைவி இந்திரா, தரணியின் மகன் வால்மீகி உள்பட 5 பேர்  மீதும், சங்கீதா கொடுத்த புகாரின்பேரில் மலர்கொடி, கிருஷ்ணமூர்த்தியின் மகன் வினோத், இளையராஜாவின் மனைவி மாரியம்மாள் ஆகியோர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story