2 பேர் கைது


2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2022 7:28 PM GMT (Updated: 25 Jan 2022 7:28 PM GMT)

வத்திராயிருப்பு அருகே வெடிகுண்டு வெடித்த விவாகரம் தொடர்பாக 2 பேரை ேபாலீசார் கைது செய்தனர்.

வத்திராயிருப்பு ,
வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் காலனி பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே உள்ள தரிசு நிலத்தில் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் தெற்கு கோட்டையூர் காலனி பகுதியை சேர்ந்த 4 பேரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த முத்தையா (வயது36), முருகன் (29) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story