மேலும் 1,087 பேருக்கு கொரோனா பாதிப்பு


மேலும் 1,087 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2022 8:35 PM GMT (Updated: 25 Jan 2022 8:35 PM GMT)

சேலம் மாவட்டத்தில் நேற்று மேலும் 1,087 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 2 பேர் பலியாகி உள்ளனர்.

சேலம்:-
சேலம் மாவட்டத்தில் நேற்று மேலும் 1,087 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 2 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை தினமும் 1000-க்கு மேல் பதிவாகி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் 1,089 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 1,087 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
அதன்படி சேலம் மாநகராட்சி பகுதியில் 435 பேர் பாதிக்கப்பட்டனர். ஏற்காட்டில் 2 பேர், நரசிங்கபுரத்தில் 3 பேர், ஆத்தூரில் 5 பேர், நங்கவள்ளியில் 6 பேர், காடையாம்பட்டியில் 8 பேர், கெங்கவல்லியில் 11 பேர், மகுடஞ்சாவடியில் 14 வாழப்பாடியில் 15 பேர் பாதிப்படைந்தனர்.
வெளி மாவட்டம்
பெத்தநாயக்கன்பாளையத்தில் 16 பேர், தலைவாசலில் 18 பேர், ஆத்தூர், பனமரத்துப்பட்டியில் தலா 19 பேர், அயோத்தியாப்பட்டணம், எடப்பாடியில் 21 பேர், சங்ககிரியில் 22 பேர், சேலம் ஒன்றிய பகுதியில் 25 பேர், தாரமங்கலத்தில் 35 பேர், ஓமலூரில் 41 பேர், மேச்சேரி, கொளத்தூரில் தலா 45 பேர் பாதிக்கப்பட்டனர். கோவை, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருச்சி, வேலூர், கடலூர், திருப்பூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சீபுரம், மதுரை, கரூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய வெளி மாவட்டத்தில் இருந்து சேலத்திற்கு வந்த 200 பேர் மற்றும் ஜார்கண்ட், கர்நாடகா, ஒடிசா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு வந்த 4 பேர் உள்பட மொத்தம் 1,087 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 
இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 102 பேர் குணமாகி உள்ளனர். மேலும் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 2 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தள்ளனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 1,737 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story